June 29, 2016

சிறிலங்கா இராணுவ கட்டமைப்பால் தமிழர்கள் இப்போதும் அச்சுறுத்தப்படுகின்றனர். ஐ.நாவுக்கு கடிதம் !

இலங்கையில் இராணுவ கட்டமைப்புக்களால் தமிழ் மக்கள் தற்போதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள்
சபையின் மனிதவுரிமை ஆணையாளருக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தினாலும், போரினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். நேற்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தினை அடுத்தே மேற்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அவர்களுக்கு இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களின் மக்கள் பிரதிநிதிகளால் விடுக்கப்படும் பகிரங்க வேண்டுகோள்: மேதகையீர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30 வது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட இலங்கை மீதான விசாரணை அறிக்கை மற்றும் இதே அமர்வில் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை முன்னேற ;றுதல்” சார்ந்து இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் 1 ஒக்ரோபர் 2015 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசத்தைச் சாhந்த நாங்கள் பின்வரும ; விடயங்களை தங்களின் கவனத ;திற்குக் கொண்டுவருகிறோம்: 1. இலங்கையில் நிலைமாறுகால நீதியை முன்னெடுப்பதில் அரசு வெளிப்படுத்தியிருக்கும ; ஆர்வத்தை வரவேற்கிறோம். ஆனால், நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை வடிவமைப்பதற்கு அடிப்படை நிபந்தனையாகவுள்ள தேசிய கலந்துரையாடலை நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுப்பதில் அரசு தவறியுள்ளது. போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களினதும், பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பலகாலமாக வடக்கு கிழக்கில் சமூகப்பணியில் ஈடுபட்டுவரும ; சமூகப் பணியாளர்களதும் பங்களிப்பு உரிய முறையில் உள்வாங்கப ;படவில்லை. 2. தேசிய கலந்துரையாடல் நடைபெறுவதற்கு முன்பே அரசு நல்லிணக்கத்திற்கான நான்கு பொறிமுறைகளை முன்வைத்துள்ளது.
இந்த பொறிமுறைகளை அரசு த Pர்மானித்தது குறித்து வடக்கு கிழக்கு சார் பாதிக்கப்பட்ட மக்கள் அடங்கலாக சிவில் சமூகத்தினரும ; அறிந்திருக்கவில்லை. 3. இந்நிலையில் அரசால் முன்வைக்கப்பட்ட பொறிமுறைகளில் ஒன்றான “காணாமற ; போனோh ; அலுவலகம்” சார் சட்ட வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங ;கப்பட்டுள்ளது. இந்த சட்ட மூலத ;தின் உள்ளடக்கம் குறித்து பாதிக்கப்பட்டடோர் மத ;தியில் கேள்விகளும ; விமர்சனங்களும ; உள்ள நிலையில் இதை அமைச்சரவை நிறைவேற்றியிருப்பது தன்னிச்சைப் போக்காகும். 4. அடிப்படையில் நல்லிணக்கத ;தை ஏற்படுத்துவதிலும் இனப்பிரச்சினையைத ; தீர்ப்பதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் பங ;களிப்பின் முக்கியத்துவத்தைக் கருத ;திற ;கொள்ளாது அரசு தனது தேவைக்கேற ;ப திட்டங்களை உருவாக்கி எம்மீது திணிக்கிறது. எனவே, இலங்கை அரசு நேர்மையான முறையில் நிலைமாறுகால நீதி செயற்திட்டத்தை முன்னெடுக்கும் என்பதில் நாம ; நம்பிக்கை இழந்துள்ளோம். மேலும 5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற ;றும ; யுத ;தத்தின் முடிவில் சரணடைந்தோர்
ஆகியோரின் நிலை குறித்து அறியாது பலவருடங்களாக அவா ;களின் குடும ;பத்தினர் தவித்துக்கொண்டுள்ளனர். இந்த உயிர்களுக்கு என்ன நடந்தது, அவா ;கள் எங்கே என்பதை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும ;. 6. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ ;கள் வழங்கும ; நடவடிக்கைகள ; அரச நிர்வாகத் தரப்பால் மட்டக்களப்பு, அம ;மாறை மாவட்டங்களில ; முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை உடன் நிறுத்தப்பட வேண்டும
7. கடந்த காலங்களில் நடைபெற்ற கூட்டுப்படுகொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான வழக்குகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்குகள் ஜூரி முறையில் இல்லாமல் நீதிமன்ற முறை மூலம ; பாதிக்கப்பட்டவர்களின் மாவட்டத ;திலுள்ள நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட வேண்டும ஜூரிமுறை விசாரணையினால் மைலந்தனைப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்காது குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதையும ; இங ;கு சுட்டிக்காட்டுகிறோம்.
8. வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மறுதலிக்கும ; நோக்குடன ; கொண்டுவரப்பட்ட பயங ;கரவாதத ; தடைச்சட்டம் இன்னும் அகற ;றப ;படாது அமுலில இருப்பதால் எதேச்சாதிகாரமான கைதுகள், விசாரணைகள், தடுத்துவைப்புகள், சித ;திரவதைகள், அச்சுறுத ;தல்கள் இன்னும் தொடர்கின்றன. இந்நிலைமைகளை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 18. 05. 2016 அன்று பொதுக்கட்டளைகள் வெளியிட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.
9. அரசியல் கைதிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. 10. சிவில் நிறுவனங்களினதும் கிராமிய மட்ட அமைப்புகளினதும் செயற்பாடுகள் புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்படுகின்றன. 11. சமூக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள பெண்கள் கண்காணிக்கப்படுவதுடன் புலனாய்வாளர்கள ; தொலைபேசி மூலமாகவும ; நோரடியாக சென்றும ; இப்பெண்களை விசாரிக்கின்றனர் 12. போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத ;துப் பெண ;கள் இன்றுவரை புலனாய்வாளர்களால ;
விசாரிக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும நடைபெறுகிறது. 13. போரினால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத் தேவைகள் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் 14. வடக்கு கிழக்கில் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் தனியார் காணிகளும் அரச காணிகளும் இராணுவத்தின் வசமுள்ளது. 15. வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் படைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இராணுவ மயமாக்கம் இன்னும் தொடர்கிறது.
16. அடிப்படையில், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய எந்தவொரு அறிகுறியையும் இன்றைய நல்லாட்சி அரசு வெளிப்படுத்தவில்லை. எனவே, உலகின் பல்வேறு நாடுகளில் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஐ.நா. நேரடியாக பங்கேற்ற அனுபவங்களின் அடிப்படையிலும ஐ.நா. தனது அங்கத்துவ நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டின் அடிப்படையிலும், இலங்கையின் நிலைமாறுகால நீதி செயற்பாடுகளை உரிமைசார் அடிப்படையில் கட்டியெழுப்புதற்கு ஐ. நா. நேரடிப் பங்குதாரராக வேண்டும்
அவ்வகையில் ஐ.நா. இலங்கை அரசுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டு இவ் நிலைமாறுகால நீதி பொறிமுறையை சர்வதேச சட்டங்களால் நெறிப்படுத்தப்படும ; கட்டமைப்பாக்க வேண்டும். இதன் மூலமே இலங்கையில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு நீதியையும் தீர்வையும ; ஏற்படுத்திட முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது




No comments:

Post a Comment