June 29, 2016

நல்லிணக்கத்தில் மக்களின் பங்களிப்பு அவசியமானது ; தேசிய சமாதானப் பேரவை!

தேசிய நல்லிணக்க முனைப்புக்களில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.


யுத்தத்தின் பின்னரான அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமாகின்றது என தெரிவித்துள்ளது.

மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் ஆதரவினை பெற்றுக்கொள்வதும் அவசியமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க முயற்சிகளின் போது எந்தவொரு இன சமூகமும் ஒதுக்கப்பட்டதாகவோ அல்லது ஒடுக்கப்பட்டதாகவோ கருதிவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment