தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் செயல்பட்ட ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
16 குழந்தைகள் தீ காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தகுந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.
இவர், அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடுமையான தீ காயம் அடைந்த குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், சிறு காயம் அடைந்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக உள்ளதாகவும், தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கிற்கு தமிழக தலைமை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர், ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தின் தாளாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதற்காக அவர்களுக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் வக்கீல் தமிழரசன் ஆஜரானார்.

No comments:
Post a Comment