May 25, 2016

சுகாதாரத்துறை மற்றும் சுகாதார ஸ்தாபனங்கள் மீதான தாக்குதலை ஆவணப்படுத்துமாறு ஐ.நாவிடம் கோரிக்கை!

19 நாடுகளில் மருத்துவத்துறை தொழிலாளர்கள் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்பில்,
ஒரு புதிய அறிக்கை ஆவணப்படுத்த ஐ.நாவிடம் கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.

மோதல் இடம்பெறும் இடங்களில் சுகாதாரத்தை பாதுகாக்கும் கூட்டணி (Safeguarding Health in Conflict Coalition) என்ற அமைப்பு, சமீப காலத்தில் முறையற்ற வகையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள் கொல்லப்படுகிறார்கள், சுகாதாரக் கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளது, எண்ணிலடங்கா பொது மக்களுக்கு இன்றியமையாத மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன என்று கூறியது.

30 இற்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்த இந்தக் குழு முன் வைத்துள்ள பரிந்துரைகளில், பல்வேறு நாடுகளின் அரசுகள் இந்த செயல்களை தடுப்பதில் தோல்வியடையும் போது, தாக்குதல்களை ஐ.நா முறையாக ஆவணப்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.நா பாதுகாப்பு பேரவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்த செயல்களை விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment