May 25, 2016

தாஜூடின் கொலை குறித்து சில வங்கிக் கணக்குகள் பரிசீலனை!

ரகர் வீரர் மொஹமட் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் சில வங்கிக் கணக்குகள் பரிசீலனை செய்யப்படவுள்ளன.


தாஜூடினின் நண்பர் உள்ளிட்ட ஆறு பேரின் வங்கிக் கணக்கு விபரங்களை பரிசீலனை செய்ய அனுமதிக்குமாறு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஆறு பேரின் வங்கிக் கணக்கு விபரங்களை வழங்குமாறு நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப் பகுதியில் குறித்த ஆறு நபர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை வழங்குமாறு 15 நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றவியல் சட்டத்தின் 127(1) சரத்தின் அடிப்படையில் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி ஆராச்சிகே சரத்சந்திர இரகசிய வாக்கு மூலமொன்றை அளித்துள்ளார்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணைப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாஜூடின் கொலை குறித்த வழக்கு இன்று மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment