May 25, 2016

சரத் பொன்சேகாவை பதவிநீக்கம் செய்யக் கோரும் மனு தள்ளுபடி!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் சரத் பொன்சேகாவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமை
சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தாக்கல் செய்த இந்த மனு, பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத பொன்சேகாவை தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்தமை சட்டத்துக்கு முரணானது என, இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார். எனவே, அந்த நியமனத்தை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் அவர் நீதிமன்றில் கோரினார். இந்தநிலையில், பொன்சேகாவின் நியமனம் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது என, தேர்தல்கள் ஆணையகத்தின் சார்பில் ஆஜரான அரச தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். எனவே இந்த நியமனத்தால் பாராளுமன்ற தேர்தல் சட்டம் மீறப்படவில்லை எனவும், இது குறித்து பிரச்சினை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment