யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைச்சம்பவங்கள்
உடன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவதோடு சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் உள்ளிட்ட புத்திஜீவிகள் குழுவிடம் மேற்குறித்த உறுதியளிப்பை பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர நேற்று வழங்கியுள்ளார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவிற்கும் அமைச்சர் டி.எம்.சுவாமிநதான் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் உள்ளிட்ட குழுவினருக்குமிடையிலான இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின்போது யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டுச்சம்பவங்கள் ஆவா உள்ளிட்ட குழுக்களின் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைச்சம்பவங்கள் போன்றவற்றை உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல், பொதுமக்கள் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, குறித்த விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதாக தெரிவித்ததோடு சம்பவங்களுடன் தொடர்புபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.
இச்சந்திப்பு தொடர்பாக கருத்து வெ ளியிட்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பொலிஸ்மா அதிபருடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்தது. யாழில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் எமது கருத்தோடு பொலிஸ்மா அதிபரும் இணங்கியுள்ளார்.
அத்தோடு பொலிஸ் மா அதிபர் இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க கூடிய வகையிலான தமிழ் மொழியிலான துரித தொலைபேசி அழைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டுமெனக் கோரியுள்ளேன் என்றார்.

No comments:
Post a Comment