May 18, 2016

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்- ரவிகரன்!

முள்ளிவாய்க்கால் இறுதியுத்ததில் உயிரிழந்த உறவுகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை காலை நந்திக்கடலிற்கு சென்று மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment