வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் கடற்கரை பகுதியில் 25 ஏக்கர் நிலத்தை தனி யார் ஒருவர் உரிமை கோருவதற்கு எதிர்ப் பு தெரிவித்து அப்பகுதியில் கடற்றொழில்செய்யும் கடற்றொழிலாளர்கள் கவனயீர் ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் பொலிகண்டி ஆலடி வான் பகுதியில் மீனவ மக்கள்ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் தமது பிரச்சினை தொடர்பாக பொலிகண்டி கிழக்கு கடற்தொழிலாளர்கூட்டுறவு சங்க தலைவர் தெரிவித்திருப்பதாவது,
நாங்கள் இக் குறித்த பகுதியில் மீக நீண்ட தலைமுறையாக மீன்பிடியில்ஈடுபட்டு வருகின்றோம். அத்துடன் இப் பகுதியிலே எங்களது தெப்பங்கள், படகுகள், மீன்பிடி உபகரணங்கள், வலைகள் என்பவற்றை வைத்து வருகின்றோம்.
இந்நிலையில் தற்போது இப் பகுதியில் உள்ள ஒருவர் நாம் பயன்படுத்துகின்ற பகுதிஅதாவது மேற்கு சனசமூக நிலையத்தில் இருந்து கிழக்கு மீன்பிடி சங்க எல்லை வரையான25 ஏக்கர் நிலப் பகுதியை தன்னுடையது என தெரிவித்து அவற்றை தனியாருக்கு விற்பனைசெய்து வருகிறார்.
இதனால் எமது தொழில் உபகரணங்களை நாம் வைப்பதற்கு இடமற்றநிலையிலும் எமது தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்ப்பட்டுள்ளது.
எனவே இவ் பிரச்சினை தொடர்பாக கிராம சேவகர், பிரதேச செயலர், அரச அதிபர், கடற்தொழில்திணைக்களம், கடற்தொழில் சமாசம், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரதுகவனத்திற்கு கொண்டு வந்திருந்த நிலையிலும் முதலமைச்சர் மாத்திரமே இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்று தருவதாக பதிலளித்துள்ளார்.
ஆனால் எனையஅதிகாரிகள் இது தொடர்பாக எதுவித பதிலும் தெரிவிக்கவில்லை. என கூறினார்.
No comments:
Post a Comment