May 22, 2016

சிறுவர்கள் மீது கல்வி சுமையை திணிக்கும் பெற்றோர்!

லங்கா ஆர்ட்ஸ் அக்கடமியினால் பரிசளிப்பு விழா இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது .

இங்கு உரையாற்றிய பேராசிரியர் மௌனகுரு, இன்று வடக்கு, கிழக்கில் சிறுவர்களுக்கு கல்வி சுமையை பெற்றோர்கள் திணிக்கின்றனர் என தெரிவித்துள்ளார் .
மாணவர்களுக்குள் இருக்கின்ற திறமைகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களின் விருப்பம் இன்றி பெற்றோர்களுக்கு விருப்பமான கல்வியினை திணிக்கும் போது படிப்பதற்கு விருப்பம் இல்லாமல் இன்று சிறுவர்கள் இருக்கின்றார்கள்.
எங்கு பார்த்தாலும் இயந்திர மயம் அனைவரது கைகளிலும் அலைபேசி, கணனி என இன்று ஓவியம் வரைகின்றவர்கள் இல்லாமல் போய் உள்ளார்கள். ஆகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் சுட்டி காட்டியுள்ளார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் G. ஸ்ரீநேசன் மற்றும் பேராசிரியர் மௌனகுரு மற்றும் உதவி கல்வி பணிப்பாளர் சுகுமாரன் சித்திர ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment