August 5, 2015

இலங்கை இந்தியாவின் வியட்நாம் - முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ச் பெர்னாண்டஸ்!

இந்திய ஆக்கிரமிப்புப் படையினரால் 1989 ஓகஸ்ட் 2ம், 3ம், 4ம் திகதிகளில் வல்வையில் நடத்திய படுகொலை தொடர்பாக "வல்வைப் படுகொலைகள் 1989' என்ற நூலுக்கு முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ச்
பெர்னாண்டஸ் அவர்கள் எழுதிய அணிந்துரையை இங்கே சங்கதி24 வாசகர்களுக்காக பதிவாக்குகின்றோம்.

ராஜீவ் காந்தியின் இராணுவ சகாசத்தால், இலங்கை இந்தியாவின் வியட்நாமாக மாறும் என்று நான் 1987 ஆகஸ்ட் ஆரம்பத்தில் சொன்னேன். அப்போது இந்திய வியட்நாமிலும் ஒரு மைலாய் இருக்குமென்று இருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இராணுவத்தினர் எங்கும் ஒரே மாதிரியானவர்கள்தான் என்று நான் அறிந்திருந்தேன். மீண்டும் மீண்டும் இதை வலியுறுத்தியிருக்கின்றேன். அவர்களது பயிற்சியும் கடுமையான வாழ்வு முறையும், போர் அவர்களிடம் துVண்டிவிட்ட மிருகத்தனத்துடன் இணைந்து, சிக்கலான சமயங்களில் அவர்களை மனிதாபிமானமற்று நடக்கச் செய்கின்றன. இதனால்தான் ஆரம்பகால இந்திய இராணுவ நடவடிக்கைகளின்போது கிளம்பிய கற்பழிப்பு, கொலை கதைகளை இந்திய அரசின் பிரச்சாரர்கள் மறுத்தபோதும், நமது இந்திய இராணுவ வீரர்கள் சாரணச் சிறுவர்கள்போல் போர்க்களங்களில் தினமும் நற்காரியங்கள் - குறிப்பாக திக்கற்ற அபலைகளுக்கு - செற்துகொண்டிருக்கின்றனர் என்ற வாதங்களையும் கேள்விக்குள்ளாக்கினேன்.

இன்று வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் தனது மைலாயை நிகழ்த்தியிருக்கின்றது. இந்திய இராணுவம் வல்வெட்டித்துறையில் காட்டிய காட்டுமிராண்டித்தனத்தைப்பற்றி இலண்டனில் இருந்து வெளிவரும் "டெய்லி டெலிகிராப்' தனது தலையங்கத்தில் விமர்சிக்கின்றது. இந்த நாசவேலை மைலாயை விடக் கொடுமையானது. அங்கே அமரிக்கப்படைகள் நிதானமிழந்து வெறியாட்டமாடினர். சிறீலங்காவின் கிராமத்தில் இந்தியப்படையினர் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கின்றனர். ஆட்களைப் படுக்கவைத்து முதுகில் சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.

வேற்றுமை அதுமட்டுமல்ல, மைலாய் அமெரிக்கப் பத்திரிகையாளர்களாலேயே உலகின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. மைலாய் பொதுமக்களுக்கெதிரான அமெரிக்க இராணுவத்தினரின் அடாவடிச் செயலை அமெரிக்க மக்கள், குறிப்பாக பத்திரிகையா ளர்கள், மாணவர், இளைஞர்கள் - ஒன்றுதிரண்டு எதிர்த்தனர். வல்வெட்டித்துறையில் இந்தக்கோரச் சம்பவம் நடந்து 13 நாட்களுக்குப்பின் அங்கு சென்ற பைனான்சியஸ் டைம்ஸ் (இலண்டன்) பத்திரிகையின் டெல்லி நிருபர் டேவிட் கவுஸ்கோ இச்சம்ப வத்தை அறிந்தார். இதைப்பற்றிய அவரது செய்தி ஆகஸ்ட் 17 அன்று அவரது பத்திரிகையில் வெளியானது. அதற்கு முன்பே ஆகஸ்ட் 13ம் திகதி இலண்டன் டெலிகிராப் பத்திரிகை, டெல்லியில் இருந்தபடி தனது நிருபரின் யயரமி கவ்ரான் தொகுத்தனுப்பிய செய்தியை வெளியிட்டது. இந்தியப்பத்திரிகையாளர்களின் ஒரு சிற பகுதியினரே அதுவும் செப்டம்பர் 3ம்திகதிக்குப் பிறகு இந்தியன் எக்ஸ்பிரசில் ரீட்டா செபஸ்டியன் கொடுத்த செய்தியை தொடர்ந்தனர்.

உண்மை என்னவென்றால் வல்வெட்டித்துறைச் சம்பவம் இந்திய அரசால் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இந்தியப் பத்திரிகையா ளர்களின் பெரும்பகுதியினர் இதில் கூட்டுச்சேர்ந்துகொண்டு புளகாங்கிதம் அடைந்தனர். இந்தியாவில் இராணுவம் புனிதமாக கருதப்பட்டு வருகின்றது. ஆனால் அடாவடித்தனங்களில் ஈடுபடும்போது, இப்புனிதத்தன்மை மேலும் கூடுகின்றது. வடகிழக்கு மாகாணத்தில் இராணுவ உடையில் நம்மவர்கள் நடத்தும் கற்பழிப்புகளையும் கொள்ளைகளையும் பற்றி ‡ யாரேனும் வாற்திறப்பதுண்டா? ஓயினம் என்ற இடத்தில் நடந்த கேவலத்தைப்பற்றி கேள்விப்பட்டவர்கள் கூட இந்தியாவில் இல்லை. இராணுவ உடையணிந்த கயவர்களும் வக்கிரம் பிடித்தவர்களும் நடத்திய மிருகத்தனமான செயல் அது.

அதிகார வர்க்கத்தையும், இராணுவத்தளபதிகளையும் மக்கள் சக்தி வென்றபோது வியட்நாமும், மைலாயும் முடிவுக்கு வந்தன. வல்வெட்டித்துறை பற்றிய உண்மைகளை இச்சிறு பிரசுரம் உலக மக்களுக்கு குறிப்பாக இந்திய மக்களுக்கு உணர்த்தும் என நம்புகின்றேன். இந்திய மக்களின் மனசாட்சியை விழிப்படையச்செய்து, வல்வெட்டித்துறையில் உயிரிழந்தோருக்காக அவர்களை நீதி கேட்கச் செய்யுமானால், இவ்வெளியீட்டின் நோக்கமும் முழுமைபெறும்.

No comments:

Post a Comment