October 12, 2015

தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் t2015‏(படங்கள் இணைப்பு)

விழித்தெழுவோம் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள், டென்மார்க்கில் Herning  நகரில் மிக எழுச்சிகரமாக நடைபெற்றது. இவ் வணக்க நிகழ்வில் 2ம் லெப் மாலதி, குமரப்பா, புலேந்திரன், உட்பட 12 வேங்கைகளையும் நினைவு கூர்ந்து
அவர்களின் திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றிவைத்ததையடுத்து அக வணக்கம் மலர் வணக்கம்  செலுத்தப்பட்டது தொடர்ந்து இந் நிகழ்வுக்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவரும் சுடர் ஏற்றினார்கள் . பின் எழுச்சிகானங்களுடன் நிகழ்வு ஆரம்பமாகியது . எழுச்சிப் பாடலுக்கான நடனங்கள், பெண்கள் எழுச்சிக் கவிதைகள், பேச்சுக்கள், பாடல்கள்,வில்லுப்பாட்டு என நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.இந்நிகழ்வுகளில் பங்குபற்றியவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் உணர்வுபூர்வமாகவும் பங்கெடுத்ததை காணக்கூடியதாக இருந்தது நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் பெண்கள் எழுச்சி நாள் நிறைவுக்கு வந்தது.

















No comments:

Post a Comment