இலங்கைச் சிறைகளில் 273 அரசியல் கைதிகள் இருப்பதாகவும் அவர்கள் பல ஆண்டுகாலமாக சிறைகளில் வழங்கு விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும்
என இன்று யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகச்சந்திப்பு ஒன்றில் EPRLF அமைப்பின் தலைவர் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைவேண்டி பல்வேறு நடவடிக்கைகளை தாம் ஏற்கனவே எடுத்திருந்தபோதிலும் இதுவரையில் எவ்விதமான பலனும் புதிய அரசில் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவிலிருந்து அழைத்துவந்த கே.பி.யை தமது தேவைக்காக பயன்படுத்தி அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை என்று கூறும் அரசு தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்யாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புதிய அரசின் வேண்டுதலுக்கிணங்க அரசியல் கைதிகளின் விபரங்களை தாம் வழங்கியபொழுதிலும் கடந்த ஜனவரிமுதல் நிகழும் நல்லாட்சியில் ஒரு தமிழ் அரசியல் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment