October 10, 2015

பொலிஸ்மா அதிபரின் காரியாலயம் சீனாவுக்கு மாற்றம்

பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் உட்பட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர். பொலிஸ் மா அதிபர் தவிர மேலும் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் 05 பேர் அந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாள
ர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேதுங்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மதுரட்ட, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கஜசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான ஏ.பி. ரொமேஷ், மற்றும் டீ. எஸ் விக்ரமசிங்க ஆகியோர் பொலிஸ் மா அதிபரின் சீன விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அவர்கள் நேற்று இங்கிருந்து புறப்பட்ட அவர்கள் எதிர்வரும் 15ம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் மீண்டும் நாடு திரும்பும் வரை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ் எம் விக்ரமசிங்க பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment