September 23, 2015

யாழ். மீனவ அமைப்புகளின் போராட்டத்தால் வெறிச்சோடியது இராமேஸ்வரம் துறைமுகம்!

யாழ்ப்பாணத்தில் இன்று மீனவர்கள் நடத்திய போராட்டத்தால், இராமேஸ்வரம் மீனவர்கள் அச்சத்தின் காரணமாக மீன்பிடிக்கச் செல்லவில்லை என தெரியவருகிறது.

இலங்கை வடக்கு கடற்பிராந்தியங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை கொண்ட இந்திய மீன்பிடி இழுவை படகுகளின் வருகையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 15 மீனவ சமாசங்களைச் சேர்ந்த மீனவர்கள், பெரும்எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று இராமேஸ்வரத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட விசைபடகு மீன்பிடி தொழிலாளர்கள் கடும் அச்சத்தால் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால் இராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடிக் காணனப்பட்டது. மீன்பிடி முடக்கத்தால் சுமார் இரண்டு கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை மற்றும் தாக்குதல் சம்பவங்களால் மாதத்திற்கு நான்கு முறை கூட மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் எங்களது குழந்தைகளின் கல்வி உட்பட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தினசரி நஷ்டத்தை சந்தித்து வருகின்றோம். இந்நிலையில் இன்று இலங்கை மீனவர்களின் போராட்டத்தால் இராமேஸ்வரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அச்சப்பட்டு கடலுக்குச் செல்லவில்லை.
ஆகவே மத்திய அரசு மீனவர்கள் விடயத்தில் போர்க்கால நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என சேகரன் என்ற மீன்பிடி தொழிலாளி கோரிக்கை விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment