கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் சான்றுப் பொருட்கள் காப்பகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த சான்றுப் பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து திருடப்பட்ட சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மேற்படி நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடுத்துவந்த சனி, ஞாயிறு தினங்களில் நீதிமன்றத்தின் சான்றுப் பொருட்கள் காப்பகம் உடைக்கப்பட்டு சான்றுப் பொருடக்கள் திருடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,
மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டப் பொலிஸார் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில்,
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் திங்கள் கிழமை மாலை, சம்பவத்துடன் தொடர்புடைய கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவரை நாம் கைது செய்திருந்ததுடன் அவரிடமிருந்து சான்றுப் பொருட்கள் காப்பகத்திலிருந்து திருடப்பட்ட கஞ்சாப் பொதிகள் மற்றும் வேறு சில சான்றுப் பொருட்களை மீட்டெடுத்துள்ளோம்.
பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை வவுனியாவில் வைத்துக் கைது செய்துள்ளதுடன், இவர்களை நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 27ம் திகதி வரையில் சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment