மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் இதுவரை கைதான நபர்களில், 6 பேரை மட்டுமே பொலிசார் தடுத்து வைத்து விசாரித்து வருகிறார்கள்.
சுவிஸ் ஆசாமி அடங்கலாக 5 பேர் கைதிகளாக இருக்கிறார்கள். இவர்களில் நிசாந்த் என்பவர் தொடர்பாக பொலிசார் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
நிசாந்த் என்று அறியப்படும் இன் நபர், ஈ.பி.டி.பி யோடு ரகசிய தொடர்பில் இருந்த நபர் என்றும், யாழ்ப்பாணத்தில் அவர் பல கெட்டப்பில் அலைந்து திரிவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.
சில வேளை நல்லூர் கந்தன் கோவிலில் இவரை காணலாம். சில வேளை பார்கில் காதலியோடு இருப்பதையும் காணலாம். இவர் இலங்கை புலனாய்வு துறைக்கு வேலைசெய்தாரா ?
இல்லை இலங்கை புலனாய்வுத் துறை இவரைப் பயன்படுத்தி பல வேலைகளைச் செய்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நிசாந்தின் மோபைல் தொலைபேசியில் பல வீ.ஐ.பிக்களது நம்பர் உள்ளதாகவும். அதனை நோண்ட ஆரம்பித்தால் அது பெரும் சிக்கலில் கொண்டு போய் விடலாம் என்றும் யாழ் பொலிசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள சட்டமா அதிபரின் ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ரணிலுக்கு வேண்டாத சில முக்கிய புள்ளிகளின் தொடர்பு இலக்கம் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நிசாந்திடம் இருப்பதால், இதனை வேறுமாதிரியாக கையாள பொலிசார் திட்டமிட்டுள்ளதாகவும்
யாழ்ப்பாணத்திற்கு மகிந்த வந்து சென்றால் , அவர் நல்லூர் கோவிலுக்கு செல்வது வழக்கம். இந் நேரங்களில் நிசாந்த் என்னும் இந்த இளைஞன் அங்கே காணப்பட்டுள்ளான் என்றும், பச்சை நிற பஜீரோ வாகனத்தில் இவன் பயணம் செய்திருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிசாந்தை பயன்படுத்தி ராணுவ உயர் அதிகாரிகள் தற்போது ஜகா வாங்கி இதில் இருந்து விலகி ஓடிவிட்டார்கள். தனக்கு பெரும் பலம் இருப்பதாக நினைத்துக்கொண்டு தான் இந்த நிசாந்த் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
இவன் ஏற்கனவே சில மொல்லமாரி தனத்தில் ஈடுபட்டதாகவும். இதனை வித்தியாவின் தயார் பொலிசில் சொன்னதாகவும் கூறப்படுகிறது.
உனக்கு தகுந்த நேரத்தில் நல்ல பாடம் புகட்டுவேன் என்று நிசாந்த் கூறியுள்ளார் (தாயாரிடம்).
இதனையும் அவர் தற்போது வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தது.
No comments:
Post a Comment