யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்களின் நூற்றாண்டு விழாப் பேரணி இடம்பெற்றது.
இன்று 09.09.2015 புதன்கிழமை காலை 7 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி 9.30 மணியளவில் நிறைவடைந்தது.
1915 – 2015 நூற்றாண்டு விழாவை பொதுமக்களுக்கு அறியத் தரும் முகமாக அலங்கரிக்கப்பட்ட ஊர்தி முன்னே செல்ல ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பின்னால் அணிவகுத்து சென்றனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்களுக்கு தமிழ் சி.என்.என் நிறுவனத்தினரால் சொக்லேட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்கள் தமிழர் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் முகமாக பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், யானை, குதிரை, மயில், புலி, சிங்கம் போன்று அலங்கரிக்கப்பட்ட நடனங்கள், காவடியாட்டம் போன்றவற்றை ஆடி அசத்தினார்கள்.
இந்து ஆரம்பப் பாடசாலை சாரண மாணவர்களும், போக்குவரத்துப் பொலிஸாரும், அதிபர், ஆசிரியர்களும் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்து இருந்தனர்.
No comments:
Post a Comment