September 10, 2015

சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நடைபயணம் ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

உள்ளக விசாரணை நிராகரித்து நம்பிக்கை தரக்கூடிய சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும்படி சர்வதேசத்திடம் கோரி இன்று
கிளிநொச்சியில் இருந்து நடைபவனி யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுள்ளது.
கடந்த 2009ல் இலங்கை படைத்தரப்பால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐ.நா சபையில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீத்துப்போகச்செய்யும் வகையில் தற்பொழுதைய மேற்குலக மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனை எதிர்த்தும், சர்வதேச விசாரணையைக் கோரியும், கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து இந்த நடைபவனி மரணித்தவர்களுக்கு சுடடேற்றி வணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.



No comments:

Post a Comment