சிலி நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 227 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலாபெல் பகுதியில் புதன்கிழமை இரவு
அடுத்தடுத்து 3 முறை பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் சாண்டியாகோவிலும் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 8.3ஆக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நில நடுக்கத்தால், சிலியின் அண்டை நாடுகளான மெக்சிக்கோ, பெரு மற்றும் ஹவாய் போன்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு மத்திய சிலிப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 500 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 2500 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment