ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த விடயங்களுக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது.
கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ள பல விடயங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீதியான விசாரணையை நடத்தக் கோரி கலப்பு நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது சர்வதேச சட்டங்களுக்கு அமைய மேற்கொள்ளும் நீதி விசாரணையாகும். இது போன்ற நீதிமன்ற அமைப்பு முறை பல நாடுகளில் காணப்பட்டது. ஆகவே இதனை இலங்கை அரசாங்கம் சபைக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைய நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment