கட்டாரிலிருந்து நான்கு இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று(சனிக்கிழமை) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய போலி ஆவணங்களுடன் ஜேர்மனிக்கு பயணித்த கிளிநொச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கட்டார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் போலி ஆவணங்களுடன் பிரான்ஸ் செல்ல முற்பட்ட களுவாஞ்சிக்குடியை சேர்ந்த மற்றுமொரு இளைஞரும், கிறீஸ் வழியாக ரஷ்யா செல்ல முற்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரும்,போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்பட்ட மன்னாரை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:
Post a Comment