September 7, 2015

நாடுகளை விட்டு வெளியேறிய அகதிகளுக்கு ஜெர்மனி தஞ்சம்!

உள்நாட்டு போர் நடை பெறும் சிரியா, குழப்பங்கள் மிகுந்த ஆசிய மற்றும் அரபு நாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அவர்களை சில ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. செர்பியா வழியாக ஹங்கேரி வந்த அவர்கள் அங்கிருந்த வெளியேற முடியாதபடி ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அகதிகளை ஆஸ்திரியாவும், ஜெர்மனியும் ஏற்க முன் வந்தனர். எனவே, அவர்கள் ஹங்கேரியில் இருந்து பஸ்கள், ரெயில்கள் மற்றும் படகுகள் மூலம் அந்த நாடுகளுக்கு சென்றனர். பலர் கால் நடையாக நடந்தே சென்றனர்.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கும், தெற்கு ஜெர்மனியின் முனிச் நகருக்கும் குழந்தைகளுடன் அகதிகள் சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பும், உணவும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment