புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி-முக்குத் தொடவாய்ப் பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இடம் ஒன்றை முந்தல் பொலிஸார் நேற்று மாலை சுற்றி வளைத்து
அங்கு இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான கசிப்பு மற்றும் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த இடத்தை சுற்றி வளைத்து மேற்கொண்ட போது அங்கிருந்து 496 போத்தல் கசிப்பு மற்றும் 75304 டிராம் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான பயன்படுத்தப்பட்ட கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் வயர்கள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment