போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி கனேடிய விஸா உள்ளடக்கிய போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்திலே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கமையவே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment