தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
வவுனியா, வைரவபுளியங்குளம் முத்தையா மண்டபத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
முன்னதாக வவுனியா, ஆதிவிநாயகர் ஆலய முன்றலில் இருந்து பான்ட் வாத்திய அணிவகுப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜ், இ.இந்திரராசா, மதத் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment