September 10, 2015

அரசியல் கைதிகளை விடுதலை செய்! வெலிக்கடை சிறைச்சாலை முன்னால் ஆர்ப்பாட்டம்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
செப்டம்பர் 10ம் திகதி வருடந்தோறும் சர்வதேச சிறைக் கைதிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு காணாமல் போனவர்களுக்கான கூட்டமைப்பு, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்பு மற்றும் சிறைக் கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்பு என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்திருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தும் பேனர்களை தூக்கிப் பிடித்து கோசங்களும் எழுப்பினர்.
அத்துடன் இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment