September 10, 2015

தமிழக விசைப்படகுகளை விடுவிக்க முடியாது ;இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம்!

இலங்கையிலுள்ள தமிழக படகுகளை விடுவிக்க முடியாது என்ற இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக மீனவர்கள தரப்பில் கடும் கண்டணம் எழுந்துள்ளது.வரும் 14 ந் தேதி இலங்கை பிரதமர் ரணில் இந்தியா வருகைதர
உள்ள நிலையில் இலங்கை கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹீந்த அமரவீர இன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் எக்காரணம் கொன்டும் விடுவிக்க முடியாது,மேலும் மனிதாபிமான முறையில் சிறையிலுள்ள 16 மீனவர்களை மாத்திரம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேலும் அவர்கூறும் போது இந்திய இழுவை படகுகளை தமிழக அரசியல் வாதிகளும் செல்வந்தர்களுமே வைத்தள்ளனர்.
ஆகவே இனி தமிழக அரசோடு பேச்சுவார்ததை கிடையாது எனவும் மத்திய அரசோடு ராஜாங்க அடிப்படையில் மட்டும் பேச்சுவார்த்தை அமையும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பால் ஏற்கனவே தாங்கள் மின்பிடி தொழிலை இழந்து வறுமையிலவாடிவரும் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
துமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவரக்கூடாது என்பது கண்டனத்துக்குறியது பராம்பரிய கடல் எல்லையில் மீன்பிடிப்பது நமது உரிமை இன்றளவும் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்து வருகின்றனர் ஆகவே எல்லை என்பது இருநாட்டு மீனவர்களுக்கும் கிடையாது ஆகவே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் தமிழக மீன்வளத்துறைதான் ஏன்எனில் கடந்த காலங்களில் பேச்சுவார்ததையின் முடிவுகளை இவர்கள் நிறைவேற்றவில்லை ஆகவேதான் இன்று இலங்கை அமைச்சர் தமிழக மீனவர்களுக்கு எதிரா பேசி இருக்கிறார் ஆகவே இதனை மிகச்சாதரணமாக கருதக்கூடாது எனவும் உடனயாக மத்திய அரசை தமிழக அரசு வழியுறுத்தி முறையான பேச்சுவார்தையை துவங்கவேண்டும் எனவும் பாக்நீரிணைப்பு மீனவர்களை ஒருங்கிணைத்து கருத்துகேட்பு,கூட்டங்கள்,நடத்தி திர்வு கானவேண்டும் இலங்கை அமைசசரின் பேச்சு தமிழக மீனவர்களுக்கு எதிரானது மட்டும் மல்லாமல் தமிழக அரசுக்கு எதிரான பேச்சாக அமைந்துள்ளது என கண்டனம்

No comments:

Post a Comment