September 15, 2015

இந்திய-இலங்கை உறவிற்கு பணயமா தமிழர்கள்? செந்தமிழன் சீமான்!

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்தியப் பயணத்தை முன்னிட்டு 16 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டது குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

எங்கள் இனத்தை கொன்றுகுவித்த ராசபக்சே இந்தியா வந்தபோதும் எங்கள் மீனவச் சகோதரர்களை விடுவிக்கப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் இறுதி நாட்களில் நடைபெற்ற இன அழிப்புப்போரிற்கு தலைமைதாங்கிய, இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் இந்தியா வந்தபோதும் இவ்வாறு மீனவச் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அந்த வரிசையில் தற்போதும் இந்த விடுவிப்பு நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் குடிமக்களான தமிழர்களை பிடித்துவைத்துக் கொண்டிருக்கும் சுண்டக்காய் நாடு இலங்கை, இந்தியாவுடனான உறவை தொடர்வதற்கு அவ்வப்போது விடுவிப்பதாக நாடகமாடுகிறது. இந்திய-இலங்கை உறவிற்கு பணயமாக இந்திய குடிமக்களான தமிழர்களது வாழ்வுரிமையோடு விளையாடும் சுண்டைக்காய் நாட்டின் அராஜகத்தை இந்திய அரசு தனது சுயநல அரசியலுக்காக வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த இழிவான செயலை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்ள முடியும்? இவ்வாறு செந்தமிழன் சீமான் அவர்கள் கேள்வியெழுப்பினார்.

No comments:

Post a Comment