September 29, 2015

எங்கள் இனம் வாழ வேண்டுமாயின் பண்பாடும் ஒழுக்கமும் எச்சந்தர்ப் பத்திலும் கட்டிக் காக்கப்படவேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை கண்டித்தும், இச்சம்பவங்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கான பாதுகாப்பு உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நடத்தப்படும் இவ் ஆவார்ப்பாட்டப் போரணி முதலாம் திகதி காலை 9.30 மணியளவில் யாழ்.பிரதான பஸ் நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு யாழ்.மாவட்டச் செயலகம் வரைச் சென்று அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்திடம் மகஜர் கையளிப்பதுடன் முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் என்.இன்பம் தலமையில் நடைபெறும் இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் தேசிய பெண்கள் சம்மேளனமும் இணைந்து கொண்டுள்ளது. மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு
இயக்கத்தின் வட,கிழக்கு இணைப்பாளர் அன்ரணியேசுதசனும் கலந்து கொள்ளவுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்றது. இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கப்பெறாமலும், அவர்கள் மீண்டும்
சமூகத்துடன் இணைந்து கொள்ள முடியாதவர்களாகவும் உள்ளார்கள். மேலும் பெரும்பாலான வன்முறைச் சம்பவங்கள் அச்சம் காரணமாக மூடிமறைக்கப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் அனைத்தும் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சிறுவர், பெண்களுக்கன பாதுகாப்புகள் உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பவற்றினை வலியுறுத்தும் முகமாகவே இவ்வார்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment