தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதனுக்கு நேற்று புதன் கிழமை(9)மாலை தோட்டவெளி யோசப்வாஸ் நகர் கிராமத்தில் அமோக வரவேற்பலிக்கப்பட்டது.
நேற்று புதன் கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை கிராம மக்கள் தோட்டவெளி வேதசாட்சிகள் ராக்கினி ஆலய சந்தியில் இருந்து மோட்டார் சைக்கில் பவனியுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கலந்து கொண்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து தோட்டவெளி வேதசாட்சிகள் ராக்கினி ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.பின் பவணியகா வருகை தந்து ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் அமோக வரவேற்பலிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலயத்திற்கு பவணியாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்பு விசேட திருப்பலி இடம் பெற்றது. ஈதன் போது பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment