தமிழின அழிப்புக்கு பன்னாட்டு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் மனித நேய ஈருருளிப் பயணம் 10 வது நாளாக யேர்மனியில் Mettlach நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு , Saarlouis நகர மத்திக்கு வந்தடைந்தது.இன்றைய
ஈருருளிப் பயணத்தில் Landau நகரில் இருந்து இரு செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு தமது தமது பங்களிப்பை வழங்கினர் . மாலை 3 மணியில் இருந்து Saarlouis நகர மத்தியில் மக்கள் நடமாடும் பகுதியில் வேற்றின ´மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்து நீதி கோரப்பட்டது . கலந்துரையாடலில் ஈடுபட்ட மக்கள் , தமிழ் மக்களுக்கு நடந்த இன அழிப்பை அறிந்து மிகுந்த கரிசனை கொண்டு தமது ஆதரவை தெரிவித்தார்கள் .மனித நேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டவர்கள் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் முகமாக யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர் . தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாதை மக்களின் கவனத்தை ஈர்ந்தது குறிப்பிடத்தக்கது .
நாளைய தினம்(10.10.2015) ஈருருளிப் பயணம் Saarbrücken நகரை நோக்கி செல்ல இருக்கின்றது . பயண நிறைவில் Saarbrücken நகர மத்தில் வேற்றின மக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்வும் நடைபெறும் .தமிழின அழிப்புக்கு பன்னாட்டு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் மனித நேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் 21.09.2015 அன்று ஜெனிவா நகரில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் இணைய இருக்கின்றது.
No comments:
Post a Comment