September 28, 2015

ஈழ விடுதலைப் போராட்டத்தில் இயக்குனர் கௌதமன் அவர்களின் யேர்மன் வருகை (படங்கள் இணைப்பு)

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழக தொப்பிள்கொடி உறவுகளின் பங்கு என்பது அளப்பெரியது . 20 க்கும் மேற்பட்ட உறவுகள் தமிழகத்தில் தமது உயிர்களை தமிழீழ மக்களுக்காய் அர்ப்பணித்து உள்ளார்கள் . அந்தவகையில்
தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்காய் பல ஆண்டுகளாய் தொடர்ச்சியாக தனது குரலை ஒலித்து வருபவரும் , தனது படைப்புகளை தமிழீழ விடியலுக்கு வலுச்சேர்க்கும்  முகமாக உருவாக்கி வருபவருமான இனமான இயக்குனர் கௌதமன் அவர்கள் யேர்மன் நாட்டுக்கு நேற்றைய தினம் வருகைதந்துள்ளார் .
Essen நகரில் வந்தடைந்த திரு கௌதமன் அவர்கள் வரவேற்கப்பட்டு அங்கு அமையப்பெற்றுள்ள மாவீரர் தூபி அமைவிடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார் . அங்கு மாவீரர்களுக்கான வணக்கம் செலுத்தப்பட்டு, சுடர் ஏற்றபட்டது . தாயகத்தில் மாவீரர் இல்லங்கள் அழிக்கப்பட்டாலும் புலம்பெயர் தேசத்தில் அவர்களின் நினைவாக இப்படியான தூபிகள் மக்களால் கட்டப்பட்டதை எண்ணி இயக்குனர் கௌதமன் அவர்கள் பெருமிதம் கொண்டு  தனது கருத்தை வெளிப்படுத்தினார் .
தொடர்ந்து Essen  நகரில் மக்கள் கலந்தரையாடல் சந்திப்பும் நடைபெற்றது .தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் திருவுருவப் படத்துக்கு சுடர் ஏற்றப்பட்டு , சந்திப்பில் கலந்துக்கொண்ட மக்களுக்கு ஒரு சுதந்திர விடுதலைப் போராளியின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் படைப்பாக இயக்குனர் கௌதமன் ஆக்கத்தில் உருவான வேட்டி எனும் குறும் படம் காண்பிக்கப்பட்டது . அதை தொடர்ந்து ஒட்டுமொத்த   தமிழ் மக்களும்  ஒற்றுமையாக எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தனது உரையை நிகழ்த்தினார்.
இன்றைய தினம்  மாலை  6 மணிக்கு Berlin நகரில் மக்கள் கலந்துரையாடல் திரு கௌதமன் அவர்களுடன் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது  .




















No comments:

Post a Comment