September 28, 2015

சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக வாழும் ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேக நபர் - சுவிஸ் பொலிஸ் விசாரனையில்.!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பில் அதன் பிரதான சந்தேக நபரான சரன் எனப்படும் குறித்த புனை பெயருடைய நிபர் இவரே என தெரிய வருகிறது.
இவரை கைது செய்து போர் கற்ற வழக்கு தொடர  சுவிட்சர்லாந்து
அரசாங்கத்தின் சட்டமா அதிபர் தினைக்களம் தீவிர விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக சுவிஸ் அரசின் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்புடைய சுவிஸ் அரச வட்டாரங்கள் எமக்கு தெரிவித்தன.
புனை பெயர்கள் பலவற்றுடன் செயற்பட்ட சரன் எனப்படுபவர் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் நெருங்கிய ஆதரவாளர் என்பதோடு அவர் இதுவரையில் சுவிட்சர்லாந்திற்கு தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கிழக்கு மாகாணத்தில் கடந்த 1992ம் ஆண்டில் இருந்து இராணுவத்துணைக்குழக்கள் பல வற்றில் இருந்த வந்ததுடன் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பல நுhறு கொலை கொள்ளை கற்பளிப்பு கப்பம் பொன்றவற்றின் சு+த்திரதாரி என தெரியவருகிறது.
மகிந்த றாஜபக்ச ஆட்சிகாலத்தில் கோதபாயவால் சுவஜஸ் நாட்டுக்கு அகதியாக அனுப்பட்ட குறித்த நபர் சுவிஸ் நாட்டில் இருந்தவாறு கிழக்கு மாகாணத்தில் பல கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் உத்தரவிட்டு வந்ததாக சுவிஸ் அரச வட்டாரங்கள் ஊடாக தெரியவருகிறது.
இதே நேரம் ரவிராஜ் கொலை தொடர்பில் இதுவரையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்குள் பொலில் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் கடற்படை படையினர் மூவரும் உள்ளடக்கப்படுவார்கள்.
சந்தேக நபர்களின் வாக்குமூலத்திற்கமைய ரவி ராஜை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை கண்டு பிடித்த குற்றப் புலனாய்வு பிரிவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் கொலையாளியை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்த விதம் மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர் கொலையாளியை அழைத்து சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தொடர்பில் அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தி வருகின்றது.

No comments:

Post a Comment