September 29, 2015

நியூயோர்க்கில் ஜோன் கெரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஜனாதிபதி!

ஐ.நா. அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தி இலங்கையின் ஜனநாயகத்தை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்வது அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை பொறிமுறைக்கு ஆதரவளிக்கும் யோசனை ஒன்றை அமெரிக்கா அண்மையில் ஐ.நா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்திருந்தது. இலங்கை இதற்கு இணை அனுசரணை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவின் நியூயோர்க் நகரை கடந்த 24 ஆம் திகதி சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 25 ஆம் திகதி நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
அன்றைய தினமே சுவிஸர்லாந்து ஜனாதிபதியை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இதனையடுத்து ஐ.நா செயலாளர் நாயகம் பான்-கீ.மூனை சந்தித்த ஜனாதிபதி, நேற்று பாகிஸ்தான் மற்றும் மோல்டா நாடுகளில் பிரதமர்களை சந்தித்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
இதேவேளை நாளை மறுதினம் (புதன்கிழமை) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

No comments:

Post a Comment