September 30, 2015

தரமற்ற குடியிருப்புகளில் தங்கும் அகதிகள்: அதிகரிக்கும் அகதிகள் வரவால் திணறும் ஜேர்மனி!

அதிக எண்ணிக்கையில் அகதிகள் ஜேர்மனி நோக்கி வருவதால் போதுமான குடியிருப்பு வசதிகளை அகதிகளுக்கு வழங்குவதில் ஜேர்மனி அரசு திணறி வருகின்றது.
ஜேர்மனி நோக்கி அகதிகள் வருகை அதிகரிப்பதன் முக்கிய காரணமாக கருதப்படுவது, படுக்கை வசதி, உணவு மற்றும் உறவிடம்.

ஆனால் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு போதிய குடியிருப்பு வசதிகளை வழங்கவே அரசு திணறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியின் பல பகுதிகளில் அகதிகள் நெருக்கடியான சூழலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அதுவே பொதுமக்கள் புழக்கத்திற்கு ஏற்றவகையில் இல்லை எனவும் குற்றச்சட்டுகள் எழுந்துள்ளன.
அகதிகளாக வந்துள்ள மக்களை இதுபோன்ற சூழலில் தங்க வைப்பது அவர்களின் சுகாதார நிலையை நெடுங்காலம் பாதிப்புக்கு உள்ளாக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
Kassal மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு அகதிகள் முகாமில் பொலிசாருக்கும் அகதிகளுக்குமிடையே நடந்த மோதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 1000 பேர் அனுமதிக்கப்பட வேண்டிய பகுதியில் 1500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறை உணவுக்காகவும், குளிக்கவும், காலைக்கடன்களை முடிக்கவும் இதுபோன்ற வெகுஜன முகாம்களில் அகதிகள் பெரும்பாடு படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஜேர்மனியின் 14 மாகாணங்களில் வெகுஜன குடியிருப்புக்கு தேவையான வசதிகள் எதுவும் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள்,
விலங்கு பாதுகாப்பு சட்டங்களில் குறிப்பிட்டுள்ள அளவு இருப்பிட வசதிகள் கூட அகதிகளுக்கு ஜேர்மனி அரசு வழங்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment