கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்பு அதிகரிப்பதற்கு புது முகங்களின் வருகையே காரணம் என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன.தற்பொழுது தேர்தலுக்கான
பிரசார நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு கருத்துக் கணிப்புகலிளும் அனைத்து பிரதான கட்சிகளும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே இருக்கின்றன.
அதேபோன்று, அதிகமான பழைய உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கும் அதேவேளையில், பல புது முகங்கள் போட்டியிடுகின்றனர். எனவே பிரசார நடவடிக்கைகளில் பல புதிய விடயங்கள் இடம்பெறுவது அந்நாட்டு மக்களை பல வகையிலும் சிந்திக்க வைத்துள்ளது.
மேலும், இம்முறை எந்த கட்சி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும், பழைய உறுப்பினர்களுடன் புதிய போட்டியாளர்கள் தமது ஆதிக்கத்தை எவ்வாறு செலுத்துவார்கள் என்ற பல எதிர்பார்ப்புகளும் உள்ள நிலையிலேயே தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment