September 26, 2015

சுவிஸ் இலங்கைக்கு முழுமையான உதவியை வழங்கும்!– சுவிஸ் ஜனாதிபதி!

இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் தமது அரசாங்கத்தின் முழுமையான உதவி இலங்கைக்கு வழங்கப்படும் என சுவிஸர்லாந்து ஜனாதிபதி சிமோநேட்டாக சோம்மருகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதிக்கும் சுவிஸர்லாந்து ஜனாதிபதிக்கும் இடையில், நியூயோர்க்கில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சுவிஸர்லாந்தில் வாழ்வாதாகவும் அவர்களுடன் உள்ள உறவுகளை தொடர்ந்தும் வலுவாக முன்னெடுக்கப் போவதாகவும் சுவிஸர்லாந்து ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுவிஸர்லாந்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக செயற்படுத்தப்படும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு சுவிஸர்லாந்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் வடக்கு கிழக்கு, அபிவிருத்தி தொடர்பில் சுவிஸர்லாந்து ஜனாதிபதிக்கு விளக்கிய, ஜனாதிபதி சிறிசேன, அதற்காக சுவிஸின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment