ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த அறிக்கையில் படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் இராணுத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
போர் இடம்பெற்ற இறுதிக் காலப்பகுதியில் படைப்பிரிவுகளின் தளபதிகள் என்னுடைய உத்தரவுகளையே பின்பற்றினர்.
2009 மே மாதம் 18ம் திகதி சரணடைந்தவர்களை கொலை செய்தல், வடக்கு கிழக்கில் காணாமல் போதல்கள், யுத்த சூன்ய வலயங்களின் மீது தாக்குதல் நடத்துதல், மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதனை தடுத்தல் உள்ளிட்ட பாரதூரமான பல குற்றச்சாட்டுக்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்து காரணிகளையும் உண்மை என நாம் ஏற்றுக்கொள்ளாத போதிலும், எவராலும் குற்றம் சுமத்த முடியும்.
விசாரணை நடத்தப்பட வேண்டுமென அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதன் ஊடாக அரசாங்கமோ அல்லது நாட்டு மக்களோ பதற்றமடைய வேண்டியதில்லை.
இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றேன்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய உள்ளக விசாரணை நடத்தி சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதன்படி மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் நான் பூரணமான ஒத்துழைப்பை வழங்குவேன் என சரத் பொன்சேகா நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசியல் தலைமைகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை சரத் பொன்சேகா நிராகரிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
விசாரணைகளுக்கு இணக்கம் வெளியிட்ட பொன்சேகா
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு தொடர்பில் பீலட் மார்ஷல் சரத் பொன்சோ இணக்கம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யாரேனும் தவறு செய்திருப்பின் விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அனைத்து விசாரணைகளையும் மேற்கொள்வதற்கும் தான் இணக்கம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment