மட்டக்களப்பு, குருந்தையடி முன்மாதிரி கிராமத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் அடிப்படை வசதிகளின்றி பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குருந் தையடி முன்மாதிரி கிராமத்திலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.
சுமார் 110 வறிய கூலித் தொழில் செய்யும் இக்கிராம மக்களில் ஒரு சிலருக்கு மாத்திரம் அரச உதவியில் நிரந்தர வீடுகள் கிடைத்திருப்பதாகவும் குறைந்த வருமானத்தில் வாழும் யுத்தத்தின் கோரத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய தமக்கு நிரந்தர வீட்டு வசதிகளையும் குடிநீர்த் திட்டங்களையும், மலசல கூட வசதிகளையும் ஏற்படுத்தித்தர புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது இம் மக்களின் கோரிக்கையாகும்.
இக்கிராமத்தில் போக்குவரத்து பாதைகள் சீரின்மையால் அவசர நோயாளர்களை இரவு நேரங்களில் கொண்டு செல்வதற்கு மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருவதாகவும் படித்த இளைஞர் யுவகளில் அநேகமானோருக்கு நிரந்தர தொழில் வசதியின்மையால் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி தொழில் வசதிகளை பெற்றுத்தர இப்புதிய நல்லாட்சி அரசாங்கம் வழிசெய்ய வேண்டும் என இம்மக்கள் வேண்டுகின்றனர்.
இதுதவிர தபால் சேவை, வைத்திய சேவைகளைப் பெறுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இக்கிராமத்தில் இருந்து வருவதாகவும் நிரந்தர அமைதியான சூழலும் நல்லாட்சி யுகமும் மலர்ந்திருக்கும் இந்த வேளையில் பாரபட்சமின்றி தமது கிராம மக்களுக்கு இச்சேவைகளை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசியல் அதிகாரம் படைத்தவர்களும் முன்வரவேண்டும் என இம்மக்கள் கோருகின்றனர்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் வருகை தரும் அரசியல்வாதிகள் இக்கிராம மக்களின் பெருங்குறையான நிரந்தர வீட்டு வசதி குடிநீர்த் திட்டங்கள் மற்றும் மலசல கூட வசதி உட்பட அடிப்படைத் தேவைகளை தேர்தலின் பின்னர் நிறை§ வற்றித் தருவதாக பொய் வாக்குறுதி அளித்துச் செல்வதாகவும் கவலை தெரிவிக்கும் இம்மக்கள் இனிமேலாவது அரசியல் வாதிகள் அடுத்த தேர்தல் ஒன் றிற்கு முன்னர் தமது குறைபாடுகளை நிவர்த்திக்க வேண்டுமென கேட்கின்றனர்.
No comments:
Post a Comment