September 14, 2015

‘போர்க்­க­ளத்தில் ஒரு பூ’ திரைப்­ப­டத்­துக்கு மீண்டும் தடை!

போர்க்­க­ளத்தில் ஒரு பூ’ திரைப்­ப­டத்தில் இலங்கை அர­சுக்கு எதி­ராக தமி­ழக சட்­ட­மன்­றத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட காட்­சியை நீக்க சொன்­னார்கள். அதற்கு நான் மறுத்­ததால் மீண்டும் படத்­துக்கு அனு­மதி சான்­றிதழ் கொடுக்க மறுத்து, படத்­துக்கு மத்­திய தணிக்கை குழு தடை விதித்து
விட்­டது என்று படத்தின் இயக்­குநர் கணேசன் தெரி­வித்­துள்ளார்.
இலங்கை ஊட­க­வி­ய­லா­ள­ரான இசைப்­பி­ரியா பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­டதை கரு­வாக வைத்து, ‘போர்க்­க­ளத்தில் ஒரு பூ’ என்ற திரைப்­படம் தயா­ரிக்­கப்­பட்­டது. இசைப்­பி­ரி­யா­வாக தான்யா நடித்­துள்ளார். இளை­ய­ராஜா இசை­ய­மைத்­துள்ள இத்­தி­ரைப்­ப­டத்தை கு.கணேசன் இயக்­கி­யுள்ளார்.இந்த படத்­துக்கு தணிக்கை குழு சான்­றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்­துள்­ளது. இது­தொ­டர்பில் படத்தின் இயக்­குநர் கு.கணேசன் தெரி­விக்­கையில்,
“என் பூர்­வீகம் தமிழ்­நாடு. வசிப்­பது பெங்­க­ளூரில். 6 கன்­னட படங்­களை இயக்­கி­யுள்ளேன். முதன்­மு­த­லாக நான் இயக்­கிய தமிழ் படம், ‘போர்க்­க­ளத்தில் ஒரு பூ’. இலங்­கையில், ஊட­க­வி­ய­லாளர் இசைப்­பி­ரியா பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு கொடூ­ர­மான முறையில் கொலை செய்­யப்­பட்­டதை உல­குக்கு காட்டும் வித­மாக ‘போர்க்­க­ளத்தில் ஒரு பூ’ படத்தை இயக்­கினேன்.
இலங்கை அர­சுக்­கெ­தி­ராக தமி­ழக சட்­ட­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னம்தான் என்னை இந்த படத்தை இயக்க தூண்­டி­யது. இந்த படத்தை முதன்­மு­த­லாக கடந்த மே மாதம் தணிக்­கைக்கு அனுப்­பினேன். படத்தை பார்த்த தணிக்கை குழு­வினர், படத்தை திரை­யிட அனு­மதி மறுத்­தார்கள். அதைத்­தொ­டர்ந்து படத்தை மறு­த­ணிக்­கைக்கு அனுப்­பினேன். மறு­த­ணிக்கை குழுவின் தலை­வ­ராக இருந்த எஸ்.வி.சேகரும், தமிழ்­நாடு தணிக்கை குழு அதி­காரி பழ­னிச்­சா­மியும் படத்தை பார்த்­து­விட்டு, அனு­மதி கொடுக்க மறுத்து விட்­டார்கள்.
அதன்­பி­றகு படத்தை டில்­லிக்கு அனுப்­பினேன். அங்கு சில காட்­சி­களை நீக்க சொன்­னார்கள். அவர்கள் சொன்ன காட்­சி­களை நீக்­கி­விட்டு, மீண்டும் அனு­மதி கோரி படத்தை அனுப்­பினேன். இலங்கை அர­சுக்­கெ­தி­ராக தமி­ழக சட்­ட­மன்­றத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட காட்­சியை நீக்க சொன்­னார்கள். அதற்கு நான் மறுத்­ததால் மீண்டும் படத்­துக்கு அனு­மதி சான்­றிதழ் கொடுக்க மறுத்து, படத்­துக்கு தடை விதித்து விட்­டார்கள்.இந்த படம், தமி­ழீ­ழத்தை நியா­யப்­ப­டுத்­து­வ­தாக, விடு­த­லைப்­பு­லி­களை ஆத­ரிப்­ப­தாக இருப்பதாகவும், படத்தை வெளியிட்டால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும் என்றும் தணிக்கை குழுவினர் கூறுகிறார்கள். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment