September 14, 2015

முன்னாள் போராளிகளுக்குமீண்டும்அச்சுறுத்தல்!

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள்விடுதலைப்புலிபோரளிகள் மீண்டும் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைக்கப்படுவது விசனத்தைஏற்படுத்துவதாக
நாடாளுமன்றஉறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின்பிரதி அவைத்தலைவருமான செல்வம்அடைக்கலநாதன்தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம்தொடர்பில்அவர்மேலும்கருத்துதெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்ஸ்ரீலங்கா அரசிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் தமிழீழவிடுதலைப்புலி போராளிகள் புனர்வாழ்வுநிலையங்களில் பலவருடங்களாகதடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
விடுதலைசெய்யப்பட்ட முன்னாள்போராளிகள் குடும்பங்களுடன் இணைந்து வாழ்ந்து வரும்நிலையில் அண்மைக்காலமாக திடீரென மறைமுகமாகவிசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
எனினும்ஆட்சிமாற்றத்தின்பின்விசாரணைகள்மற்றும்அச்சுறுத்தல்கள்குறைவடைந்துகாணப்பட்டன.
ஆனால் தற்போது மீண்டும் முன்னாள் போராளிகள் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்குஉட்படுத்தப்பட்டுஅச்சுறுத்தப்படுவதாகபாதிக்கப்பட்டவர்கள்முறையிட்டுள்ளனர்.
இதனால்அவர்களும், அவர்களுடைய குடும்பங்களும் பல்வேறு நெருக்கடிகளைச ந்தித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment