வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் கடந்த 07.09.2015 அன்று யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வேலைவாய்ப்பினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு மகஜர்களும்
கையளிக்கப்பட்டன. அப்போது இரண்டு கிழமை கால அவகாசம் கொடுக்கப்பட்டும் இதுவரை காலமும் சாதகமான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. எனவே நாம் மீண்டுமொரு போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
வருகின்ற செவ்வாய்க்கிழமை (22.09.2015) சரியாக காலை 08.00 மணிக்கு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு முன்னால் வடமாகாணத்தினைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் (உள்வாரி, வெளிவாரி, தேசிய உயர் தொழில்நுட்பக் கல்லூரி) அனைவரையும் தவறாது கலந்து காெள்ளுமாறு வேண்டி நிற்கின்றோம்.
வடமாகாணத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் விசேட குழு அன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தருவதால் அவரின் வருகை எமக்குச் சாதகமாக அமையுமென எதிர்பார்க்கின்றோம். சந்திரிகா தலைமையில் வருகைதரும் குழுவிடம் பட்டதாரிகள் அனைவரினதும் கையெழுத்து நேரடியாக வாங்கிக் கையளிப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். எனவே அனைத்துப்பட்டதாரிகளையும் தவறாது பங்கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: பட்டதாரிகள் ஒவ்வொருவரும் தத்தமக்கான வேலைவாய்ப்பிற்காகப் போராட வேண்டியவர்களாகவுள்ளோம். எனவே பிறர் எமக்காகப் போராடுவார்கள் எனும் சுயநலத்தினை விடுத்து , அனைவரும் போராட்டத்தில் பங்குகொண்டு வலுச்சேர்க்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
No comments:
Post a Comment