September 20, 2015

கிளிநொச்சியின் மூத்த சமுக சேவையாளர், பிரபல வர்த்தகருமான சரவணபவானந்தன் காலமானார்.!

கிளிநொச்சியில் மூத்த சமூக சேவையாளர் பிரபல வர்த்தகருமான இரத்தினசிங்கம் சரவணபவானந்தன் கடந்த 18ம் நாள் அமரத்துவம் அடைந்துள்ளார்மாரடைப்பு காரணமாக அவர் உயிர் நீத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் ஆரம்பகாலங்களில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இருந்து வந்து குடியேறிய சரவணபவானந்தன் கிளிநொச்சியில் தற்பொழுது கரைச்சி பிரதேசசபை அமைந்துள்ள பகுதியில் பொதுச்சந்தை இருந்தபோது வேல்முருகன் என்ற பெயரில் வர்த்தக நிலையமொன்றை நிறுவி, சிறந்ததொரு வர்த்தகராக அறியப்பட்ட அவர், கிளிநொச்சி வர்த்தக சங்க நிர்வாகத்தை பத்து வருடங்கள் வரையில் சிறந்த முறையில் தலைவராக இருந்து நிர்வகித்துள்ளார்.
இக்கட்டான நீண்ட போர்க்காலத்தில் கிளிநொச்சி நகரின் மையத்தில் வாழ்ந்த அவர் பல இடப்பெயர்வுகள் சொத்தழிவுகள் என்பவற்றில் இருந்து மீண்டும் முளைக்கும் மனிதராக அவர் இருந்துள்ளார்.
கிளிநொச்சி புகழ்பூத்த கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அறப்பணியில் பரிபாலன சபையின் உபதலைவராக  இறுதிவரை முருக பக்தராக இருந்து செயலாற்றியுள்ளார்.
தமிழ் தேசிய பணியிலும் இறுதிவரை பற்றாளராக இருந்து தன் கடமைகளை ஆற்றியவராக சரவணபவானந்தன் இருந்துள்ளார். இவருடைய சொந்த காணி நிலம் என்பன இன்னும் இராணுவத்தால் பரவிப்பாஞ்சானில் விடுவிக்கப்படாத நிலையில் சாகும்வரை தன் நிலம்பற்றியதும் தன் சொந்த கிராமமான பரவிப்பாஞ்சான் பற்றியதுமான ஏக்கமும் அவரிடம் இருந்தது.
கிளிநொச்சியில் சகலருடனும் நல்லுறவை பேணி வந்த அவரின் மறைவு காரணமாக கிளிநொச்சியில் வர்த்தகர்கள் சமூகப்பணியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தற்பொழுது உதயநகரில் உள்ள அவரது தற்காலிக முகவரியில் சரவணபவானந்தன் அவர்களின் பூதவுடலுக்கு மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment