இலங்கையில் 2010ஆம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்பட்ட ஊடகவியலளார் பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டமையை ஊடகவியலளார்களை பாதுகாக்கும் அமைப்பு வரவேற்றுள்ளது.
இந்தநிலையில் இவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து ஜனாதிபதி மைத்திரிபால தீர்வு ஒன்றை அறிவிக்கும் போது எக்னெலிகொடவின் குடும்பத்தினர் தாம் தேடிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனின் நிலையை அறிந்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
லங்கா இ நியூஸின் ஊடகவியலாளரான எக்னெலிகொட, 2010 ஜனாதிபதி தேர்தலின்போது காணாமல் போனார்.
அப்போது அவர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிட்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக செயற்பட்டார்.
No comments:
Post a Comment