இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு முகாம்களை மூடவேண்டும் என்று கோரி நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த சுமார் 800 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி சிறைச்சாலையில் இயங்கிவரும் சிறப்புமுகாம் நோக்கி அவர்கள் ஊர்வலம் ஒன்றை நடத்த முயன்றனர். திருச்சி- புதுக்கோட்டை வீதியை மறித்து கோசமிட்டனர்.
அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களை சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பது மனித உரிமைமீறல் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அனைத்து நிகழ்வுகளுக்கும் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
எனினும் அவர்கள் திருச்சி முகாமுக்கு செல்லும் முன்னரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment