முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி தனது தேர்தல் விஞ்ஞானபத்தை
நாளை செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 4ஆம் திகதி) மாலை சுதுமலை அம்மன் கோயில் வீதிச் சுற்றாடலில் வைத்து வெளியிடத் தீர்மானித்திருந்த போதிலும், அதற்கான கூட்டத்துக்குரிய அனுமதியை வழங்க மானிப்பாய் பொலிஸார் மறுத்தமையை அடுத்து அந்நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
28 ஆண்டுகளுக்கு முன்னர், 1987 இல் இதே ஓகஸ்ட் 4 ஆம் திகதியன்று இதே சுதுமலை அம்மன் கோயில் சுற்றாடலில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்துத்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமது முக்கிய அரசியல் முடிவுகள் அடங்கிய உரையை ஆற்றியிருந்தார். அதே இடத்தில், அதே தினத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு முன்னாள் புலிகள் எடுத்த முயற்சி பொலிஸ் அனுமதி மறுப்புக் காரணமாக கைகூடாமல் போயுள்ளது. தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வு இட்ம்பெறும் புதிய இடம், திகதி குறித்து ஜனநாயகப் போராளிகள் கட்சி விரைவில் அறிவிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment