யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வியாபார நிலையத்திற்கு அண்மையில் அநாதரவான நிலையில் கிடந்த
வயோதிபர் ஒருவருடை சடலம் பொலிஸாரினால் இன்று செவ்வாக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட் வயோதிபர் மானிப்பாய் பகுதியினைச் சேர்ந்தவர் என்றும் மாரடைப்புக் காரணமாகவே அவர் திடீரென் உயிரிளந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிளந்த வயோதிபருடைய துவிச்சக்கர வண்டி, தலைக்கு அணியும் தொப்பி, பாதனி என்பவையும் சடலம் மீட்கப்பட் இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த வயோதிபர் இன்று மதியம் 2 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் வந்து ஆணைக்கோட்டைப் பகுதியில் பூட்டிய நிலையில் இருந்த வியாபார நிலையம் முன்பாக நீண்ட நேரமாக படுத்திருந்ததை தாம் கண்டதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தி சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment