August 27, 2015

யாழ் ஆனைக்கோட்டை பகுதியில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவர் கைது!

சைக்கிளுக்கு காற்றடிக்க சென்ற 12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்றவரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 ஆனைக்கோட்டையை சேர்ந்த குறித்த சந்தேகநபர் தனது கடைக்கு காற்றடிக்க வந்த 12 வயதான சிறுமியை கடைக்குள் வைத்து மூடிவிட்டு, துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.
 சிறுமியின் அபயக்குரலையடுத்து அங்கு திரண்டவர்கள், ஆசாமியை நையப்புடைத்துவிட்டு, பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்றுமுன்தினம் இவரை நீதிமன்றத்தில் நிறுத்திய போதோ விளக்கமறியல் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment