August 19, 2015

விருப்புவாக்கில் தில்லுமுல்லு நடைபெற்றதாக அருந்தவபாலனின் ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.!

விருப்புவாக்கில் தில்லுமுல்லு நடைபெற்றதாகவும் தமிழரசுக் கட்சித் தலைமை அதற்குத் துணை போய் சொந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்
அருந்தவபாலனை திட்டமிட்டு தோல்வியடையச் செய்ததாகவும் குற்றஞ்சாட்டி அவரது ஆதரவாளர்கள் நேற்று யாழ்.நகர் மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகம் முன்பு திரண்டு குழப்பத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 9.30 மணியளவில் கட்சி அலுவலகம் முன்பு பல வாகனங்களில் வந்திறங்கிய அருந்தவபாலன் ஆதரவாளர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆராவாரம் செய்தனர்.இதன்போது அலுவலகத்தில் இருந்த தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை அலுவலகத்துக்குள் அழைத்துப் பேசினார்.சிறிது நேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வெளியில் வந்த அருந்தவபாலன் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டது முதல் அங்கு எமது செய்தியாளர்கள் நின்றிருந்தபோதும் வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் எந்தக் கருத்துக்களையும் கூற மறுத்துவிட்டனர்.தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட அருந்தவபாலனை தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்க முயன்றபோதும் அவர் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை.
தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் முடிவடைந்து விருப்பு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோதும் வாக்கு எண்ணும் மையத்தில் அருந்தவபாலன் மற்றும் தமிழ்க் கூட்டமைப்பு மற்றொரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் பெரும் குழப்பம் நிலவியதாக அங்கிருந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment